Pad man film challenge:
நீங்கள் படத்திற்கான விளம்பரத்தை தருகிறீர்களா? அல்லது விழிப்புணர்வை தருகிறீர்களா?? என்பது உங்கள தெளிய சிந்தனைக்கு உட்பட்டது.
பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தான் நாப்கின் வாங்குறார்கள். இதிலென்ன குற்ற உணர்வும், சங்கோஜமில்லையென விளம்பரம்?? நாப்கின் வாங்குகிறவர்களில் எத்தனை பேர் வீட்டில் எரிந்து விழாமல் இருக்கிறார்கள்?
"இந்த டிஸ்யூ பேப்பர் கூட எடுத்து போட மாட்டியா?" "இந்த கவர் பெப்பரப்பேன்னு வெளிய வச்சி இருக்க?" "யூஸ் பண்ணா எடுத்து மறைச்சி வைக்க தெரியாதா?" "பாத் ரூம்ல அப்படியே வச்சிட்டு வந்து இருக்க?" இத்யாதி இத்யாதி கேள்விகள்....
கிராமத்தில் வளரும் போது பழைய உள்பாவடைகள், அல்லது கிழிந்த தடிமன்னான போர்வைகள் அளவாய் வெட்டி இரத்தக்கறை படிந்திருக்க செங்கல் அடுக்குகளிலும், மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளின் கீழோ, ஆண்கள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ ஒளித்து வைத்திருப்பார்கள். அதற்கான காரணங்கள் கேட்ட பொழுது சொல்வதற்கு மழுப்பினார்கள். "பெண்களின் சமாச்சாரம்" என்ற வார்த்தைகளில் எல்லாம் முடிந்து போனது.
நகரத்தில் இருக்கும் போது கிரிக்கெட் பரிச்சயம். அப்போது கிரிக்கெட் தேசிய விளையாட்டு. நண்பனின் வீட்டில் ஒளிப்பரப்பாகும் ஸ்டார் போர்ட்ஸ் சேனலில் நண்பனின் குடும்பத்தாரோடு அமர்ந்து ஒவ்வொரு பந்திற்கும் நகத்தை கடித்த காலம். ஓவர்களுக்கு இடையே இரண்டு கண்ணாடி டம்பளர் நிறைய நீரை ஊற்றி வந்த விளம்பரங்களில் "விஸ்பர்னா என்ன?" என்ற எங்கள் கேள்விக்கு நண்பன் அடிவாங்கிய காலம்.
இதோ சென்னை போன்ற பெரு நகரத்தில் கூட முகசுழிப்புகள் உண்டு. போன மாதத்தில் காண்டம் கேட்டதற்கு மருந்துக்கடை பெண்மணி முணுமுணுத்து திட்டிக்கொண்டே ஒரு பிரவுன் நிற கவரில் பேக் செய்தார். "கவர் எல்லாம் வேண்டாம்ங்க. காண்டம் பாக்கெட் மட்டும் கொடுங்க" என்ற பொழுதும் முகம் சுழித்தார்.
தற்போது வரும் சேலஞ்ச் பதிவுகளை பதியும் பெண்ணிடமாவது நீங்கள் பாலியல் குறித்த சந்தேகங்களோ, நாப்கின் குறித்த உரையாடல்களோ நடத்தி பாருங்களேன். அது தனி பதிவாக, ஆபாசவாத முத்திரையுடன் தான் வரும். குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் தேசியக்கொடி நிழற்படத்தை மாற்றி தேசபக்தியை நிரூபிப்பதற்கும் நாப்கினை கையில் வைத்துக் கொண்டு தரிசனம் தருவதிலும் எந்த ஒரு வித்தியாசமும் இருக்கவில்லை. அது ஒரு சுய தம்பட்ட பதிவு. அவ்வளவு தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக