செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

அம்முவும் கரடி பொம்மையும்....

மஞ்சள் நிற துணியை அழகாக தைத்திருந்தார்கள். சுற்றி எம்பிராய்டிங் செய்யப்பட்டு இருந்தது. மஞ்சள் நிறத்தை சுற்றி சிவப்பு நிறத்தில் நெய்யப்பட்டு இருந்தது. துணியின் நடுவே குட்டியூண்டு கரடி பொம்மையை தைத்திருந்தார்கள்.

கரடி பொம்மை என்றால் முழுவதுமாக ஆனால் குட்டியூண்டு தைத்திருந்தார்கள். அம்மு வலது காலில் போட்டு இழுத்துக் கொண்டு இருந்தாள். இரண்டு கால் நுழைக்கும் ஓட்டையையும் ஒரே காலில் போட்டு இழுத்துக் கொண்டு, அந்த முயற்சி தோற்க்கவே சத்தமாய் அழுதாள்.

அழுது சுற்றும் முற்றும் பார்த்தவள் மீண்டும் துணியை கழட்டினாள். கையில் எடுத்து முன்னும் பின்னும் திருப்பினாள். இப்போது கரடி பொம்மை உள்பக்கம் திரும்பியது. கோவமாய் தூக்கி வீசினாள். சுவற்றில் விழுந்து பொத்தென்று விழுந்தது.

தலையை திருப்பி பார்த்தாள். மீண்டும் மஞ்சள் துணியை பார்த்தாள். வலது காலை திருப்பி இடது கையால் ஊன்றி எழுந்தாள்.

வேகமாய் ஓடி கையில் எடுத்தாள். வலது கையில் சிறிது நேரமும் இடது கையில் சிறிது நேரமும் வைத்து திருப்பினாள். இந்த முறை சரியாக கரடி பொம்மை முன் பக்கம் திரும்பியது.

சுவற்றை இடது கையால் பிடித்துக் கொண்டாள். வலது காலில் ஒரு ஓட்டையில் கால் நுழைத்து, இன்னொரு ஓட்டையில் இடது கால் நுழைத்தாள். குனிந்து இழுத்த இழுப்பிற்கு முட்டி தாண்டி ஏறியது.

ஏற்கனவே போட்டு இருந்த ஜட்டி இடைமறித்து நிற்க.. ஓவென அழத்தொடங்கினாள். இந்த முறை கரடி பொம்மையும் அழுவதாய் தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...